சிங்கப்பூரில் பிப்ரவரி 13-ஆம் தேதி (நேற்று) சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை(SCDF) 995 எனும் அவசரத் தொலைபேசி எண் குறித்து கூறியது.
கடந்த 2022-ஆம் ஆண்டு மக்கள் 995 அவசர எண்ணுக்கு விடுத்த அவசரமற்ற அழைப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டை அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு மொத்தம் 11,538 அவசரமற்ற அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்தது.
அவசரமற்ற அழைப்புகள் கோவிட்-19 தொடர்பான சம்பவங்களால் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மக்களுக்கு சிங்கப்பூர் தற்காப்புப் படை வேண்டுகோள் விடுத்தது.உயிருக்கு ஆபத்துள்ள அவசரச் சூழல்களில் மட்டுமே அவசர தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தும் படி கேட்டுக் கொண்டது.