சிங்கப்பூர் ஜப்பானியர் ஆட்சியில் கீழ் வந்ததன் 81-ஆம் ஆண்டு நிறைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு சிங்கப்பூர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கப்பூர் மக்கள் முழுமை தற்காப்பு முக்கியத்துவத்தை பற்றி மேலும் தெரிந்து கொண்டனர்.1967-ஆம் ஆண்டிலிருந்து இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மலர் வளையங்கள் வைக்கப்பட்டது. மாணவர்கள், சமூக தரப்பினர்கள் என பல்வேறு தரப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கலாச்சார, சமூக இணையத்துறை அமைச்சர் எட்வின் கலந்துக் கொண்டார்.
பருவநிலை மாற்றங்கள், இணைய வழி குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
மன உறுதி மட்டும் போதாது. சமூகத்தில் பிளவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சமூகத்தில் ஏற்படும் பிழைவுகள் நாட்டை நிலைக்குலைய செய்து விடும் என்றார். ஒற்றுமையாக செயல்பட்டால் எதற்கும் அஞ்ச தேவையில்லை என்று கூறினார்.
நேற்று சிங்கப்பூரில் முழுமைத் தற்காப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
1942-ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் வீழ்ச்சி அடைந்ததைக் குறிக்கும் வகையில் முழுமை தற்காப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
சிங்கப்பூரையும் அதன் வருங்காலத்தை பாதுகாக்கவும் ஒவ்வொருவரும் அவரவர் பங்கை அளிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது.
இந்த ஒலி 1 நிமிடம் நீடிக்கும். இதனைக் குடிமைத் தற்காப்புப் படை அறிவித்தது.
சிங்கப்பூரில் நேற்று மாலை 6.20 மணிக்கு ஒலி எழுப்பப்பட்டது. வருடாந்திர நடவடிக்கையில் இதுவும் ஒன்று.