SLE விரைவுச்சாலையில் பயங்கர விபத்து!! நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி!!

சிலேத்தார் எக்ஸ்பிரஸ்வேயில் (Seletar Expressway-SLE) இரு லாரிகளும்,இரு பைக்குகளும் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் சிக்கிய நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது.மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் 32 வயது முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள்.இந்த விபத்து நேற்று(டிசம்பர் 20) நடந்ததாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது.

இச்சம்பவம் குறித்து நேற்றிரவு சுமார் 10 மணியளவில் தகவல் வந்ததாக காவல்துறை கூறியது.இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.