Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா!சிங்கப்பூர் தைப்பூச திருவிழா 2023-ஆம் ஆண்டின் புதிய விதிமுறைகள்!

சிங்கப்பூரில் இவ்வாண்டு தைப்பூச திருவிழாவில் பாத யாத்திரை இடம் பெரும். பக்தர்கள் காவடிகளையும் செலுத்தலாம். கிருமி பரவல் காரணமாக கடந்த ஈறாண்டுகளாக தைப்பூச திருவிழாவில் பாத யாத்திரைகளோ, காவடிகளோ இடம் பெறவில்லை.

தைப்பூசம் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ஆகியவற்றின் சார்பாக இந்து அறக்கட்டளை வாரியம் அது குறித்து தகவல்களை தெரிவித்துள்ளது. பாத யாத்திரை அடுத்த மாதம் பிப்ரவரி 4-ம் தேதி இரவு 11.30 மணிக்கு தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.

பக்தர்கள் serangoon ரோட்டில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலிருந்து tank ரோட்டில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்திற்கு காணிக்கைக்களைச் செலுத்த பாத யாத்திரையாகச் செல்லலாம்.காணிக்கைகளைச் செலுத்தும் பக்தர்களும், பாத யாத்திரை செல்வோரும் பிப்ரவரி 5-ம் தேதி இரவு 11.00 மணிக்குள் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலுக்குள் சென்று சேர்ந்து விட வேண்டும்.

பால் காவடி, தொட்டில் காவடிகளுக்கான அனுமதி சீட்டுக்களை இரண்டு கோவில்களிலும் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். ரத காவடி,அலகு காவடி ஆகியவற்றைக்கான அனுமதி சீட்டுக்களை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்களில் மட்டுமே வாங்க முடியும். பால்குடங்களுக்கான அனுமதி சீட்டுக்களை இணையத்தளத்தில் மட்டுமே வாங்க முடியும். அனுமதி சீட்டுக்களை அடுத்த மாதம் 3-ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள முடியும்.