Temasek Holdings நிறுவனத்தின் நிகர முதலீட்டு மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது!!
சிங்கப்பூர்: டெமாசெக் ஹோல்டிங்ஸின் நிகர முதலீட்டு மதிப்பு 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி நிறுவனத்தின் நிகர முதலீட்டு மதிப்பு 389 பில்லியன் வெள்ளி ஆகும். ஒரு வருடத்திற்கு முன்பு இது 382 பில்லியன் வெள்ளியாக இருந்தது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து வந்த முதலீட்டு வருமானம் அதற்கு உதவியது.
கடந்த நிதியாண்டில் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், பயனர் சேவைகள் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் முதலீடு செய்தது.
அதிலும் குறிப்பாக நீடித்த நிலைத்தன்மை துறையில் 44 பில்லியன் வெள்ளி முதலீடு செய்தது.
2050-ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலும் குறைக்க திட்டமிட்டுள்ளது. டெமாசெக் ஹோல்டிங்ஸ் 38 பில்லியன் வெள்ளியை அதற்கு உதவக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
மீதமுள்ள 6 பில்லியன் வெள்ளி கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க நினைக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்தது.
உலக அரசியல் சூழல் வரும் நிதியாண்டில் முதலீடுகளை பாதிக்கலாம் என டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
Follow us on : click here