செப்டம்பர் 30-ஆம் தேதி(இன்று) சிங்கப்பூரில் தேக்கா நிலையம் புதுப்பிப்பு பணிகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தேக்கா நிலையத்தின் 2-வது தளம் திறக்கப்பட்டது.
முதல் தளத்தில் உள்ள உணவகம் மற்றும் ஈரச் சந்தை செப்டம்பர் 30-ஆம் தேதி (இன்று) திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
புதுப்பிப்பு பணிகளுக்காக தேக்கா நிலையம் மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
இன்று தேக்கா நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைப் பற்றி Tanjong Pagar குழுதொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Alvin Tan தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை கொண்டாடும் விதத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது தேக்கா நிலையம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.