ஐடிஇ கல்லூரி சென்ட்ரலில் மாணவனை துன்புறுத்திய இளைஞர்கள் கைது…!!

ஐடிஇ கல்லூரி சென்ட்ரலில் மாணவனை துன்புறுத்திய இளைஞர்கள் கைது...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஐடிஇ கல்லூரி சென்ட்ரலில் சமீபத்தில் இளைஞர் ஒருவரை சக மாணவர்கள் துன்புறுத்தப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வந்தது.

வீடியோவில், இளைஞரை 10 பேர் கொண்ட குழு உதைப்பதும், அடிப்பதும், கிண்டல் செய்வதையும் காணலாம்.

சிலர் இளைஞன் துன்புறுத்தப்படும் பொழுது வேடிக்கை பார்ப்பதையும் காணலாம்.

அதிலும் சிலர் ஒரு படி மேலே சென்று அடிப்பதை ரசித்து வீடியோவும் எடுத்தனர்.

மற்றவர்கள் அடிப்பதை தட்டிக் கேட்காமல் சத்தமிட்டு, துன்புறுத்தியவர்களை ஊக்கப்படுத்தினர்.

ஆகஸ்ட் 2 அன்று பல்வேறு சமூக ஊடக தளங்களில் இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியானது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவனை துன்புறுத்திய இளைஞர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 3 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கலவரம், சட்டவிரோத கூட்டம் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் போன்ற சாத்தியமான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வது போன்றவற்றை காவல்துறை தீவிரமாகக் கருதுகிறது.

மேலும் காவல்துறை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை கையாளவும் தயங்க மாட்டோம் என்று கூறியது.

ஐடிஇ கல்லூரியின் மைய முதல்வர் சுரேஷ் நடராஜன் ஆகஸ்ட் 2 அன்று வெளியிட்ட அறிக்கையில், ஆங் மோ கியோவில் உள்ள வளாகத்தில் நடந்த கொடுமை சம்பவங்கள் குறித்து நிறுவனம் அறிந்துள்ளதாக கூறியது.

மேலும் இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

எங்களின் கல்வி நிறுவனம் அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை வழங்க முயற்சித்து வருகிறது. மாணவர்கள் கொடுமைப்படுத்துதலை கல்லூரி தீவிரமாக கருதுகிறது. மேலும் நடத்தை விதிமீறல்கள் புரியும் மாணவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.