சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமி பரவலுக்குப் பிறகு பெற்றோர்கள் அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டனர். அவர்கள் குழந்தைகளைப் பாலர் பள்ளிகளிலும், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களிலும் சேர்க்க ஆரம்பித்து விட்டனர்.
இதனால் பாலர் பள்ளிகளுக்கும், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களுக்கும் தேவைகள் அதிகரித்துள்ளது. இந்தத் துறைகளில் வர்த்தகம் வளர்கிறது.
வர்த்தகம் வளர்கின்றது ஆனால், பணி புரிய ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
பெற்றோர் சிலர் தங்கள் குழந்தைகளைக் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் விட்டு செல்லவே ஆசைப்படுகின்றனர். தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுச் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இதனால் அவர்கள் வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற பதற்றம் இருக்காது என்று கூறுகின்றனர்.
இந்த ஆண்டு குழந்தைப் பராமரிப்புச் சேவையை அணுகுவோர் விகிதம் அதிகரித்துள்ளது.கடந்த 2022-ஆம் ஆண்டை விட சுமார் பத்து விழுக்காடு அதிகரித்துள்ளது.
தொடர்ந்து தகுதியான ஆசிரியர்களைப் பாலர் பள்ளி நிலையங்களும், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களும் தேடுகின்றன.
திறமைசாலிகளை ஈர்ப்பதற்கு நல்ல சம்பளம், பதவி உயர்வு போன்றவற்றைக் கொண்டு ஈர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.