Latest Tamil News Online

கண்டுகொள்ளாத தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள்… திறமைக்கு அங்கீகாரம் இல்லை..நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பளிச்பதில்!

தமிழ் சினிமாவில் பிற மாநிலங்களை சேர்ந்த கதாநாயகிகள் மட்டுமே பிரபலமடைந்து வரும் காலகட்டத்தில் அத்தி பூத்தது போல திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற திறமையான கதாநாயகிகளும் தங்களது திறமையை காட்டி முன்னனிடத்தை வகுத்து வருகின்றனர்.

குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ், எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடித்து தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஆவார்.

தற்பொழுது அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஃபர்கானா’ என்ற படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவரை பேட்டி எடுத்தபொழுது அவரிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் நீங்கள் ஏன் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடித்த காக்கா முட்டை படம், பல விருதுகளை பெற்று எனது நடிப்பினை வெளிப்படுத்தினாலும், அந்த படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்ட மட்டுமே செய்தனர்.

அதன் பிறகு சரியான வாய்ப்புகள் எதுவும் என்னை தேடி வரவில்லை. குறிப்பாக பெரிய நடிகர்கள் யாரும் அவரது படங்களில் என்னை ஒப்பந்தம் செய்யவில்லை.

காக்கா முட்டை படத்துக்கு பிறகு சுமார் ஒன்றரை வருடம் நான் நடிக்க வாய்ப்பு இல்லாமல் வீட்டில் தான் இருந்தேன்.

தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் போன்ற சில நடிகர்கள் மட்டுமே எனது நடிப்பை அங்கீகாரம் செய்து அவருடைய படத்தில் நடிக்க வைத்தார்கள். மற்ற நடிகர்கள் யாரும் என்னை கண்டு கொள்ளவே இல்லை.

அதனால்தான் நான் கதாநாயகியை மையமாக வைத்து இயக்கிய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள் அதுவே எனக்கு போதும். அவர்களுக்காக எனது சிறந்த நடிப்பை நான் எப்பொழுதும் தருவேன் என்று மனம் திறந்து பேசி இருக்கின்றார்.