ஐயோ… பாவம் ஆண்கள்… படுக்கையறை காட்சியை பற்றி விமர்சித்த தமன்னா….

ஐயோ... பாவம் ஆண்கள்... படுக்கையறை காட்சியை பற்றி விமர்சித்த தமன்னா....

தமிழ் திரையுலகில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் தமன்னா. தனது பழுங்கி போன்ற உடலாலும் திறமை மிக்க நடிப்பாலும் தமிழ்நாட்டில் அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர். அவருக்கு அழகு மற்றும் திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தில் தான் தெரிந்தது. கல்லூரி படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் அவருக்கு ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தது. பாலிவுடில் அவன் நடித்திருந்த பப்ளி பவுன்சர் மற்றும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரை நெல்சன் திலீப் குமார் மீண்டும் ஜெயலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அதில் அவர் நடனமாடிய காவலா பாடல் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு மிகுந்த வரவேற்பையும் பெற்றது.தமிழில் சுந்தர் சி தயாரிப்பில் வெளிவந்த அரண்மனை 4 ல் பேயாக நடித்திருந்தது அனைவரின் வரவேற்பையும் பெற்றது.

தமிழில் பையா படத்தின் ஹீரோவோடு கிசுகிசுக்க பட்டாலும் அவர் அதை பெரிதும் பொருட்படுத்தாமல் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். இதற்கிடையில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தில் நடித்த போது தான் நடிகர் விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இவர்களது திருமணம் குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் மேலும் ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் நடைபெறலாம் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவர் படுக்கையறை காட்சி குறித்து மிகவும் ஓப்பனாக பேசியிருந்தார்.. சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், படுக்கையறை காட்சியில் நடிப்பதற்கு பெண்களை காட்டிலும் ஆண்களே மிகவும் சங்கடப்படுவர். அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பதற்றத்துடனும், சங்கடத்துடனும் தான் நடிப்பார்கள். அதனை நான் வெளிப்படையாக பார்த்திருக்கின்றேன். அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு பெண்களை காட்டிலும் ஆண்கள் சற்று தயங்குவது உண்மைதான் என்று அவர் பேசிய பேட்டி ஒன்று இப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக உள்ளது.