ஆஸ்திரேலியாவில் Hallstatt மலைகளுக்கு அருகே உள்ள அழகான ஓர் ஊர்.
அந்த இடம் படங்கள் எடுப்பதற்கான பிரபலமான ஒன்று.
அங்கு சுற்றுலாப்பயணிகள் அளவுக்கு அதிகமான Selfie படங்களை எடுப்பதை தடுப்பதற்காக அண்மையில் வேலி ஒன்றை அமைத்துள்ளது.
அங்கு படங்கள் எடுப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.
ஆனால், நூற்றுக்கணக்கான மக்கள் தான் அங்கு வசிக்கின்றனர் என்று BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
ஊர் மேயர் நாங்கள் அமைதியான சூழலில் வாழ விரும்புவதாக குறிப்பிட்டார்.
ஊரில் அமைக்கப்பட்ட வேலி நீக்கப்பட்டது.இருப்பினும்,பதாகை ஒன்றை வைக்கப்போவதாக மேயர் கூறினார். அங்கு மக்கள் வாழ்கிறார்கள் என்பதை நினைவூட்டும் வகையில் அமையும் என்றார்.
UNESCO உலக மரபுடைமை தளங்களில் Hallstatt ஒன்று.