#worldnews

சாதாரண நிகரத்தொகை சுமார் 2 பில்லியன் வெள்ளியை எட்டியது!

கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய சேமநிதியில் முதலீட்டுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரணக் கணக்கு நிகரத்தொகை சுமார் 2 பில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது. கணக்கு பதிவு செய்யப்பட்டது முதல் இதுவே அதிக அளவு.நிதி நிறுவனங்களின் உயரும் வட்டி விகிதங்களைப் சேமநிதி உறுப்பினர்கள் அதனைப் பயன்படுத்தித் தங்கள் சேமிப்பிற்குக் கூடுதல் ஆதாயம் பெற விரும்புகின்றனர்.இதுவே காரணம் என்று கூறிகின்றனர். ஆண்டுக்கு சேமநிதி சாதாரண கணக்கு வட்டி விகிதம் 2.5 விழுக்காடாக உள்ளன.கிட்டத்தட்ட 2.7 பில்லியன் வெள்ளி 4-ஆம் காலாண்டில் மட்டும் முதலீட்டுக்கென …

சாதாரண நிகரத்தொகை சுமார் 2 பில்லியன் வெள்ளியை எட்டியது! Read More »

நிலச் சரிவால் சேதமடைந்த உலு பாண்டான் பூங்கா இணைப்பு!வடபகுதி சீரமைக்குப்பின் திறப்பு!

கடந்த செப்டம்பர் மாதத்தில் நேர்ந்த நிலச்சரிவால் உலு பாண்டான் பூங்கா இணைப்பின் ஒரு பகுதி சேதமடைந்தது. தற்போது பூங்கா இணைப்பின் வடபகுதி முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் Clementi Northarc கட்டுமானத் தளத்திற்கு அருகே இருக்கிறது.சுங்கை உலு பாண்டான் கால்வாய் படுகையிலும் அதன் கரைகளிலும் இருந்த மண் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டதாக தேசியப் பூங்கா கழகம் தெரிவித்தது. இப்போது கால்வாயின் தென்கரையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள 550 மீட்டர் நீளமுள்ள பகுதி மட்டுமே …

நிலச் சரிவால் சேதமடைந்த உலு பாண்டான் பூங்கா இணைப்பு!வடபகுதி சீரமைக்குப்பின் திறப்பு! Read More »

தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பாடாங்!UNESCO உலக மரபுடமைப் பட்டியலில் சேர்க்க அடையாளம் காணப்பட்டுள்ளது!

கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய தினத்தன்று பாடாங் தேசிய சின்னமாக அறிவிக்கபட்டது.இதன் அருகில் இருக்கும் மற்ற கட்டங்களும் தேசிய சின்னமாகவும் அமைகின்றது. அதேபோல் வரலாற்று முக்கியத்துவ இடங்களாக அமைகிறது.இதில் விக்டோரியா தியேட்டர் மற்றும் கான்செர்ட் ஹால்,முன்னாள் உச்ச நீதிமன்றம்,நகர மண்டபமும், முன்னாள் நாடாளுமன்றம், Anex கட்டடம் உள்ளிட்டவைகளும் அடங்கும். பாடாங் சிங்கப்பூரின் அடுத்த UNESCO உலக மரபுடமைத் தலங்களின் பட்டியலுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோல் அதைச் சுற்றி உள்ள கட்டட கலையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை நேற்று …

தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பாடாங்!UNESCO உலக மரபுடமைப் பட்டியலில் சேர்க்க அடையாளம் காணப்பட்டுள்ளது! Read More »

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் பறிமுதல்!

சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் தோ பாயோ தொழிற்சாலை வட்டாரத்தில் குளிரூட்டப்பட்ட வாகனம் ஒன்றைச் சோதனையிட்டனர். அதில் கள்ள சிகரெட்டுகள் சிக்கியது.அந்த வாகனத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகளை வண்டிக்குள் உறைந்த மீன் சரக்குகளுக்கு இடையே மறைத்து வைத்து இருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிறகு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.சுமார் 628,480 வெள்ளி தீர்வு சிகரெட்டுகளுக்கு செலுத்த வேண்டியதாகும்.கிட்டத்தட்ட 56,570 வெள்ளி இவற்றுக்கான பொருள் சேவை வரி என்று மதிப்பிடப்படுகிறது. வாகனமும், வரி …

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் பறிமுதல்! Read More »

ஜனவரி மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான். ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று,டெஸ்ட் அடித்த பிறகு பல லட்சப் பணத்தைக் கட்டிவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்கான காலதாமதம் தான். …

ஜனவரி மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE! Read More »

சிங்கப்பூருக்கு ருமேனிய அதிபர் 4 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்!

சிங்கப்பூருக்கு 4 நாள் பயணம் ருமேனிய அதிபர் klaus werner மேற்கொள்ள உள்ளார். சிங்கப்பூர் அதிபர் Halimah Yacob அழைப்பை ஏற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.இரு நாட்டின் அரசாந்திர உறவின் 55 -ஆம் ஆண்டு நிறவை ஒட்டி அவருடைய வருகை அமைகிறது. நாளை வரவிற்கிற ருமேனிய அதிபருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். சிங்கப்பூர் வந்தவுடன் அவர் அதிபர் Halima Yacob, சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong ஆகியோரைச் சந்திப்பார். ருமேனிய அதிபருடன் அவருடைய மனைவி,வெளியுறவு அமைச்சர்,அதிபர் …

சிங்கப்பூருக்கு ருமேனிய அதிபர் 4 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்! Read More »

வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் நிறுவனங்களுக்காக வரவிருக்கும் புதிய திட்டம்!

சென்ற வாரம் பட்டப்படிப்பு அல்லது அதற்கும் மேல் படித்து இருக்கும் ஊழியர்களின் சான்றிதழ்களைச் சரிபார்ப்பது அவசியம் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்திருந்தது. நிறுவனங்களும் மனிதவள அமைச்சகமும் ஏற்கனவே பல நிறுவனங்கள் மேல்நிலை வேலை அனுமதியில் வேலைக்குச் சேரும் ஊழியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவதாக CNA விடம் கூறியது. இவ்வாண்டு செப்டம்பர் மாதம் மனிதவள அமைச்சகம் புதிய விதிமுறையைக் கொண்டுவர உள்ளது.அத்தகைய நிறுவனங்களுக்கு இந்த புதிய விதிமுறையின்கீழ் அதிகம் பாதிப்பு இல்லை என்று கூறியது. மேல்நிலை வேலை அனுமதியில் வேலைக்குச் …

வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் நிறுவனங்களுக்காக வரவிருக்கும் புதிய திட்டம்! Read More »

மலேசியா கடற்படை தலைவர் Admiral சிங்கப்பூருக்கு வருகை!

சிங்கப்பூருக்கு மலேசியா கடற்படைத் தலைவர் Admiral Abdul Rahman Ayob முதல்முறையாக அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார். இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே வலுவான உறவை கட்டிக்காப்பதன் அவசியத்தை சிங்கப்பூரும் மலேசியாவும் மறு உறுதிப்படுத்ததி உள்ளன. சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சரை மலேசியா கடற்படைத் தலைவர் சந்தித்தார்.வட்டாரப் பாதுகாப்புச் சவால்களைச் சமாளிப்பதற்கான ஒத்துழைப்பு குறித்து இருவரும் இணைந்து பேசி ஆராய்ந்தனர். Admiral மூன்று நாள் பயணமாக சிங்கப்பூருக்கு வந்துருக்கிறார். அதில் ஒரு பகுதியாக சாங்கி கடற்படைத் தளத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்கு …

மலேசியா கடற்படை தலைவர் Admiral சிங்கப்பூருக்கு வருகை! Read More »

மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்படும்!

சிங்கப்பூரில் மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.மத்திய சேமநிதிக் கணக்குகள் வைத்து இருக்கும் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி அல்லதோர் அவர்களுடைய கணக்குகளை மூட வேண்டும். மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்பட்டதும் அவர்களுடைய மத்திய சேமநிதி திட்டங்களில் பங்கேற்புப் முடிவுக்கு வரும். அவர்களுடைய தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு தொகை மாற்றப்படும். 2024-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி அல்லாதோர் அவர்களுடைய கணக்குகளை மூட வேண்டும் என்று குறிப்பிட்டது. அவர்களுடைய கணக்குகளை மூடவில்லை என்றால் …

மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்படும்! Read More »

ரயில் கோளாற்றால் பயணம் தாமதம்!மன்னிப்பு கேட்ட நிறுவனம்!

மார்ச் 7-ஆம் தேதி (நேற்று) தாம்சன் -ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் ஏற்பட்ட ரயில் கோளாற்றால் கூடுதலாக 25 நிமிடம் பயணம் செய்வதற்கு தேவைப்பட்டதாக SMRT நிறுவனம் தெரிவித்தது. இது குறித்து மாலை 5 மணியளவில் செய்தி வெளியிட்டு இருந்தது.மாற்று ரயில் பாதைகளைப் பயணிகள் பயன்படுத்துமாறு அறிவித்தது. கேல்டிகாட் நிலையத்திற்கும் ஆர்ச்சர்ட் நிலையத்திற்கும் இடையே இடைவெளி பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இலவச பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்ட அனைத்து நிலையத்திற்கும் வழங்கப்படும் என்றும் கூறியது. மாலை …

ரயில் கோளாற்றால் பயணம் தாமதம்!மன்னிப்பு கேட்ட நிறுவனம்! Read More »