சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!!
சிங்கப்பூரில் இன்று(டிசம்பர் 14) வேலைச் சந்தை நிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மூன்றாம் காலண்டில் பணிபுரிவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மூன்றாவது காலண்டில் 4,000 க்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்துள்ளனர். இது 2020-க்குப் பிறகு மிக அதிக எண்ணிக்கையாகும். அதன் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பணி நீக்கங்கள் மொத்த வர்த்தக துறையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாண்டு காலாண்டில் புதிய வேலைகளில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தது.