#Singapore news

சிங்கப்பூரில் தேசிய சேவையை செய்ய தவறினால் தண்டனையா? அமெரிக்கருக்கு சிறை!!

சிங்கப்பூரில் தேசிய சேவை கடமைகளை நிறைவேற்ற தவறிய குற்றத்திற்காக அமெரிக்கா குடிமகனுக்கு 9 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Garrett Alexander Gan Kok Leng (40) என்பவர் அமெரிக்காவில் பிறந்தவர்.அவரது தந்தை சிங்கப்பூரைச் சேர்ந்தவர்.எனவே அவர் வம்சவாளியில் அடிப்படையில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முறையான அனுமதியின்றி சிங்கப்பூரில் இருந்து வெளியில் இருப்பது உள்ளிட்ட 2 குற்றச்சாட்டுகள் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் அவர் மீது மேலும் 2 குற்றச்சாட்டுகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. …

சிங்கப்பூரில் தேசிய சேவையை செய்ய தவறினால் தண்டனையா? அமெரிக்கருக்கு சிறை!! Read More »

சிங்கப்பூர் : மண்டாய் Bird Paradise இல் முதியவர்களுக்கு இலவச டிக்கெட்!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் வனவிலங்கு பூங்காவான Birds Paradise, மூத்த குடிமக்களுக்கு இலவச நுழைவுச் சலுகையை அறிவித்துள்ளது. மாண்டாய் வனவிலங்கு காப்பகத்தில் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பற்றிய ஆழமான புரிதலை பார்ப்பதன் மூலமும் கேட்கும் ஒலி மூலமும் பெற முடியும். மேலும் இது பார்வையாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது.மேலும் வனவிலங்கு பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம். மூத்தோருக்கான 49 வெள்ளி மதிப்புடைய டிக்கெட்டை வாங்குவதன் மூலம் கூடுதலாக ஒரு முதியவருக்கு இலவச …

சிங்கப்பூர் : மண்டாய் Bird Paradise இல் முதியவர்களுக்கு இலவச டிக்கெட்!! Read More »

சிறப்புத் தேவையுடைய மாணவர்களின் கலை படைப்பு மூலம் திரட்டப்படும் நிதி..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சமூக சேவை நிறுவனமான ரெயின்போ ஸ்டேஷன், மாற்றுத்திறனாளி மாணவர்களின் கலைப்படைப்பு மூலம் நிதி திரட்டுகிறது. உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு கலைத்துறையில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. அதன் அடிப்படையில் ரெயின்போ நிலையம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.இங்கு சுமார் 190 மாணவர்கள் பயிற்சி திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்கள் உருவாக்கிய படைப்புகள் அனைத்தும் கண்காட்சியில் இடம்பெறும். ரெயின்போ நிலையத்தின் கலைப் பயிற்சித் திட்டத்தின் கீழ் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இது ஊனமுற்ற மாணவர்களுக்காக …

சிறப்புத் தேவையுடைய மாணவர்களின் கலை படைப்பு மூலம் திரட்டப்படும் நிதி..!!! Read More »

சிங்கப்பூரில் முதியோர்களுக்காக புதிய பராமரிப்பு நிலையங்கள்!!

சிங்கப்பூர்:மக்கள் உழைக்கும் கட்சியின் சமூக தொண்டு நிறுவனமான PCF இன் நிர்வாகத்தின் கீழ் மூன்று புதிய முதியோர் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனஅவை அடுத்த ஆண்டு (2025) ஜூரோங் மற்றும் சீமெய்யில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சமூகத்தில் முன்னேற இந்த நிலையங்கள் உதவும். இந்த நிலையங்கள் அவர்களை துடிப்புடன் வைத்திருக்கவும், ஆக்கபூர்வமாகவும் வைத்திருக்கவும் உதவும். பராமரிப்பு மையங்கள் மூத்த குடிமக்களை சமூக தொடர்பு மற்றும் சமூக ஈடுபாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பொழுதுபோக்கு மையங்களாக செயல்படுகின்றன. …

சிங்கப்பூரில் முதியோர்களுக்காக புதிய பராமரிப்பு நிலையங்கள்!! Read More »

ரிவர்வேல் லிங் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (அக்டோபர் 6) இரவு ரிவர்வேல் லிங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை முகநூலில் பதிவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இரவு 8.35 மணியளவில் தகவல் கிடைத்ததாக குடிமை தற்காப்புப்படை தெரிவித்துள்ளது. கூட்டுறவு இல்லத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் நீர்ஜெட் பம்புகளை பயன்படுத்தி தீயை அணைத்ததாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் தங்கியிருந்த 100 பேர் வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் …

ரிவர்வேல் லிங் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…!!! Read More »

சிங்கப்பூரில் விரைவாக கட்டத்திட்டமிட்டுள்ள BTO வீடுகள்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் இந்த மாதம் BTO வீடுகளை வெளியிடும்.இந்த வீடுகள் அனைத்தும் சுமார் இரு வருடத்தில் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் 2,085 புதிய வீடுகள் விற்பனைக்கு உள்ளன.மொத்தம் இதில் மூன்று கட்டுமானத் திட்டங்கள் உள்ளன. புக்கிட் பாத்தோக்கில் ஒரு வீட்டுத் திட்டமும், செங்காங்கில் இரண்டு வீட்டுத் திட்டங்களும் வரவுள்ளன. புக்கிட் பாத்தோக் BTO வீடுகள் இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. …

சிங்கப்பூரில் விரைவாக கட்டத்திட்டமிட்டுள்ள BTO வீடுகள்..!! Read More »

சிங்கப்பூரில் குடும்ப பிணைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சி…!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பரம்பரை பரஸ்பர பிணைப்பை மேம்படுத்துவதற்காக உற்சாகமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குடும்பங்களுக்கான வாழும் மன்றம் மற்றும் மாண்டாய் வனவிலங்கு குழுவால் அவை நடத்தப்பட்டன.இந்த நிகழ்ச்சி பறவைகள் பூங்காவில் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாண்டாய் வனவிலங்கு குழுமத்தால் “Mandai is Wild about SG”  என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் உள்ளூர் சமூகங்களுடனான ஈடுபாட்டை வலுப்படுத்துவதையும், அதிகமான மக்கள் இயற்கையை ரசிக்க வாய்ப்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மாண்டாய் வனவிலங்கு சரணாலயத்திற்கு …

சிங்கப்பூரில் குடும்ப பிணைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சி…!!! Read More »

சாதனைகளை குவித்து வரும் சிங்கப்பூரின் நீர் சாகச வீரர்…!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் KiteFoil நீர் சாகச வீரர் மேக்ஸ் மேடர் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறார். மேடம் 2024 இல் இத்தாலியில் நடைபெற்ற IKA KiteFoil உலகத் தொடர் போட்டியில் உலக பட்டத்தை வென்றார். ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூருக்காக பதக்கம் வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையை மேடர் பெற்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு மேடரின் மூன்றாவது பட்டம் இதுவாகும். கடந்த மாதம் ஆஸ்திரியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். கடந்த …

சாதனைகளை குவித்து வரும் சிங்கப்பூரின் நீர் சாகச வீரர்…!! Read More »

ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கு புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது!!

முதுமை மறதி மற்றும் மனச்சோர்வு ஏற்படுவதற்கு முன் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கு புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.அது முதன்முறையாக Alexandra மருத்துவமனையின் சமூகச் சுகாதார நிலையத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த கருவி நோயாளிகளின் ரத்த அழுத்தம்,ரத்த கொழுப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து கூறும்.அதோடு மூளையை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு இந்த கருவி ஒரு நல்ல வழிக்காட்டி என்று கூறப்படுகிறது. கருவியை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான வழிகளும் ஆராயப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரின் வயதான மக்கள்தொகைக்கு நோய்களை முன்கூட்டியே கண்டறிவது …

ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கு புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது!! Read More »

அரியவகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை உயிர் பிழைக்க வைக்க புதிய முறையை கண்டுபிடித்துள்ள சிங்கப்பூர்!!

சிங்கப்பூரில் புதிய உயிரணுச் சிகிச்சை முறை உருவாக்கப்பட்டுள்ளது.அது அரிய வகை ரத்த வகை புற்றுநோயைக் குணப்படுத்துகிறது தெரிய வந்துள்ளது. அந்த சிகிச்சை முறையை T-Cell acute lymphoblastic (T-ALL) எனும் ஒரு வகை கடும் ரத்தப் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது.அதில் 94 சதவிகித்தினருக்கு அறிகுறிகள் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவ பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்களால் புதிய சிகிச்சை முறை உருவாக்கப்பட்டது . அரியவகை T-ALL ரத்தப் புற்றுநோய் …

அரியவகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை உயிர் பிழைக்க வைக்க புதிய முறையை கண்டுபிடித்துள்ள சிங்கப்பூர்!! Read More »