#Singapore news

விமானியாக விரும்புவோர் இனி ஆறாண்டுகள் காத்திருக்க தேவையில்லை!!

நீங்கள் விமானியாக வேண்டுமா? அதற்கு இனி ஆறாண்டுகள் காத்திருக்க வேண்டாம்.நான்காண்டுகளில் வர்த்தக உரிமத்தைப் பெறலாம்.அடுத்த ஆண்டு முதல் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் அதற்கான பாடத்திட்டத்தை வழங்கும்.மேலும் மாணவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்பையும் படிக்கலாம். இந்த புதிய திட்டம், விமானத்துறையின் மீட்சி எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி மற்றும் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகையாக பாடத்திட்டம் வழங்கப்படுவது சிங்கப்பூரில் இதுவே முதன்முறை.பல்கலைக்கழகம் சிங்கப்பூர் விமானி பயிற்சி கல்லூரியுடன் இணைந்து அந்த முயற்சியை எடுத்துள்ளது. விமானிப் பயிற்சி கல்லூரியில் உள்ள …

விமானியாக விரும்புவோர் இனி ஆறாண்டுகள் காத்திருக்க தேவையில்லை!! Read More »

சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஆன்லைனில் விற்பனை!!

சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட 3 பொருட்கள் ஆன்லைனனில் விற்கப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. அந்த மூன்று பொருட்களும் உடல் எடையைக் குறைக்க உதவும் என்றும், நச்சுத்தன்மையை நீக்கும் என்று கூறி விற்கப்படுகின்றன. சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இ-கமெர்ஸ் தளங்களில் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. 2 பொருட்களில் எடைக் குறைப்பு மருந்து உள்ளது. இந்த மருந்து 2010 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு பொருட்களும் மாரடைப்பு மற்றும் …

சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஆன்லைனில் விற்பனை!! Read More »

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் மகள் டாக்டர் லீ வெய் லிங் தனது 69 வயதில் காலமானார்!!

சிங்கப்பூர்:பிரதம மந்திரி லீ குவான் யூவின் மகளான டாக்டர் லீ வெய் லிங் அரிய வகை மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 69 வயதில் காலமானார். அவரது மரணத்தை அவரது இளைய சகோதரர் லீ சியென் யாங் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 5.50 மணிக்கு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார். மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தையான டாக்டர் லீ, மூத்த அமைச்சர் லீ சியென் லூங்கின் சகோதரியும் ஆவார். 2004 முதல் 2014 …

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் மகள் டாக்டர் லீ வெய் லிங் தனது 69 வயதில் காலமானார்!! Read More »

சிங்கப்பூர் : ஓர் வீட்டில் தீ விபத்து!! ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!!

கிளமெண்டி அவென்யூ 8 இல் பிளாக் 339 இல் அக்டோபர் 8-ஆம் தேதி(இன்று) தீ விபத்து ஏற்பட்டது.வீட்டில் இருந்த நபர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த தகவலை 8World செய்தித்தளம் வெளியிட்டது. ஜூரோங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங் இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு டாக்டர் டான் சென்றதாக குறிப்பிட்டார்.அருகில் இருந்த அண்டை வீட்டுக்காரர்களை நேரில் சந்தித்ததாக கூறினார். மருத்துவமனைக்கு …

சிங்கப்பூர் : ஓர் வீட்டில் தீ விபத்து!! ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இ-சிகெரட்டுகள் விற்பனை செய்த தேசிய சேவையாளர்!!

சிங்கப்பூரில் இ-சிகெரட்டுகள் மற்றும் அவற்றின் பாகங்களை சட்டவிரோதமாக பேக்கேஜிங் செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டை தேசிய சேவையாளரான Tan Teck Jin (21) ஒப்புக்கொண்டார். குத்துச்சண்டை பயிற்சி கட்டணங்களைச் செலுத்தவும்,தனது சொந்த செலவுக்காகவும் பகுதி நேரமாக அதில் ஈடுபட்டதாக அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் கூறினர். அதிகாரிகள் கிடங்கு ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது 130000 மின் சிகெரட்டுகள் மற்றும் 60000 க்கும் அதிகமான மின் சிகெரட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனை நடத்திய போது டான் கைது செய்யப்பட்டார்.பறிமுதல் …

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இ-சிகெரட்டுகள் விற்பனை செய்த தேசிய சேவையாளர்!! Read More »

சிங்கப்பூரில் தோட்டக்கலையை ஊக்குவிக்க இப்படி ஓர் முயற்சியா?

சிங்கப்பூரில் தீவு முழுவதும் தோட்டக்கலையை ஊக்குவிபதற்காக 170 க்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் மொத்தம் 13 தோட்டங்களில் அமைந்துள்ளன. அக்டோபர் 8-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். தனிநபர்கள் தோட்டங்களில் ஓர் குறிப்பிட்ட இடத்தில் காய்கனிகளை வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நல்ல தோட்டக்கலை நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்ட இடங்கள் மாற்றப்படலாம். தற்போது வரை தீவு முழுவதும் …

சிங்கப்பூரில் தோட்டக்கலையை ஊக்குவிக்க இப்படி ஓர் முயற்சியா? Read More »

முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு வழங்கப்பட்ட தனி நபர் சிறை…!!!

சிங்கப்பூர்:முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் தனிமைச் சிறையில் இருப்பதாக சிங்கப்பூர் சிறைத்துறை தெரிவித்துள்ளது. அதிக பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக திரு.ஈஸ்வரன் மற்ற கைதிகளுடன் இருப்பதை விட தனிமைப்படுத்தப்பட்டதாக சிறைச்சாலை குறிப்பிட்டது. CNA எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் சிறைத்துறை இந்த விவரங்களை வெளியிட்டது. அனைத்து கைதிகளுக்கும் ஒரே அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும், அனைவரும் சிறை விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அது கூறியது. திரு.ஈஸ்வரனுக்கு 12 மாத சிறைத் தண்டனையை நேற்று (அக்டோபர் 7) …

முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு வழங்கப்பட்ட தனி நபர் சிறை…!!! Read More »

சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல்!!

சிங்கப்பூர்: தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலின் சிங்கப்பூர் பயணமானது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்தின் அழைப்பின் பேரில் திரு யூ அதிகாரத்துவ பயணமாக சிங்கப்பூர் வந்தடைந்தார்.வர்த்தகம், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் குறித்து இரு நாடுகளும் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் கொரியா வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த சிங்கப்பூர்-கொரியா வணிக மன்றத்தில் முக்கிய உரை நிகழ்த்துவார். அக்டோபர் …

சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல்!! Read More »

சமூகச் சேவைகளை பாராட்டி வழங்கப்பட்ட சமூக நாணய விருது…!!!

சிங்கப்பூர்:சமூக உண்டியல் கடந்த நிதியாண்டில் பல்வேறு சமூக சேவைகளுக்காக 69 மில்லியன் வெள்ளிக்கு மேல் வழங்கியுள்ளது.இது முந்தைய நிதியாண்டை விட சுமார் 17 மில்லியன் வெள்ளி அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,சமூக நாணய விருது விழாவில் இந்த விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டன. சிங்கப்பூரில் சமூக சேவைத் துறையில் சிறந்த பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வருடாந்திர நிகழ்வாகும். நிகழ்ச்சியில் தலைவர் தர்மன் சண்முகரத்தினம் கலந்து கொண்டு உரையாற்றினார்.நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட நிறுவன பங்குதாரர்கள் மற்றும் தனிப்பட்ட …

சமூகச் சேவைகளை பாராட்டி வழங்கப்பட்ட சமூக நாணய விருது…!!! Read More »

சையட் அல்வி ரோட்டில் திடீரென இடிந்து விழுந்த இருகடைகள்…!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சையட் அல்வி சாலையில் 84 மற்றும் 85 எண் கொண்ட இரண்டு அடுக்கு கடைகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக கூறியுள்ளது. கடை எண் 84 இன் இரண்டாவது மாடியில் இருந்து ஒருவர் மீட்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. படிக்கட்டு அடைக்கப்பட்டதால் அவரால் வெளியே வர முடியவில்லை.இடிபாடுகளில் மேலும் யாராவது சிக்கியுள்ளார்களா என்பதைத் தேடும் பணிகள் நடைபெற்று …

சையட் அல்வி ரோட்டில் திடீரென இடிந்து விழுந்த இருகடைகள்…!!! Read More »