#Peru

ஆற்றில் கவிழ்ந்த பேருந்து!! 25 பேர் பலி!!

வடக்கு பெருவின் ஆண்டியன் மலைப்பகுதியில் ஏப்ரல் 28 மாலை அனைவரையும் சோகத்தில் மூழ்க வைத்த கோர விபத்து ஏற்பட்டது . செலண்டினில் இருந்து சொரோச்சுகோவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஆற்றில் கவிழ்ந்தது. இந்த துயர சம்பவத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சாலை கரடுமுரடாகவும், செப்பனிடப்படாமலும் இருந்ததால், மீட்புப் பணிகளைச் சவாலாக மாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களுக்கு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என உள்ளூர் அரசு அறிவித்துள்ளது.

தங்கம் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!! ஊழியர்களுக்கு நேர்ந்த துயரம்!!

பெருவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 7 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெருவின் லா ரின்கோனாடாவில் டிசம்பர் 21 ஆம் தேதி அன்று நடந்தது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் சுரங்கத்தில் கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது போன்ற விபத்துகள் அங்கு அடிக்கடி ஏற்படுகின்றன என்று அதிகாரிகள் கூறினர்.

பெருவை ஒரே நாளில் தாக்கிய நிலநடுக்கங்கள்!!

டிசம்பர் 10ஆம் தேதி அன்று மத்திய பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதே பகுதியில் அதே நாளில் ஏற்பட்ட 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பசிபிக் நெருப்பு வளையத்தில் பெரு …

பெருவை ஒரே நாளில் தாக்கிய நிலநடுக்கங்கள்!! Read More »