இனி S.Pass E.Pass வேலைகளில் சேர்வது கடினம்..
சிங்கப்பூரில் மேல்நிலை வேலை அனுமதி பெற நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் கல்வித் தகுதி நம்பத்தகுந்தவையாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்தப் புதிய மாற்றம் செப்டம்பர் முதல் நடப்புக்கு வரவுள்ளது. போலியான கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படும் சம்பவங்களைக் கையாள்வதே அதன் நோக்கம். ஆனால் கல்விச் சான்றிதழ்கள் உண்மைதானா என்பதை உறுதிசெய்ய மூன்றாம் தரப்பினரிடம் ஆதாரம் பெறும் போக்கு நீண்ட காலமாக நடப்பில் உள்ளதாக மனிதவளத் துறை நிபுணர் அரவிந்த் மதுசூதனன் கூறினார். “மனிதவள அமைச்சு […]