#india

ஆன்லைனில் டிக்கெட்டுகள் அறிவிப்பு திருவண்ணாமலையில்

திருவண்ணாமலையில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற உள்ள நிலையில் ஆன்லைனில் டிக்கெட் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த நிலையில் வரும் நவம்பர் 24ஆம் தேதி முதல் ஆன்லைனில் டிக்கெட் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருநாள் காண 500 ரூபாய்க்கு 500 டிக்கெட்டுகள் நவம்பர் 26 ஆம் தேதி காலை பரணி தீபம் காண கொடுக்கப்படும். அடுத்தது 600 ரூபாய்க்கு 1000 டிக்கெட்டுகள் மாலை மகா தீபம் …

ஆன்லைனில் டிக்கெட்டுகள் அறிவிப்பு திருவண்ணாமலையில் Read More »

ரெட் அலர்ட் சபரிமலை

சபரிமலை பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருவதால் சபரிமலைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. பக்தர்கள் அந்தப் பாதையில் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது முக்கியமாக நிலக்கல்லில் இருந்து பம்பை வழியில் நிலச்சரிவுக்கு அதிக வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை கொண்டு பேரிடர் மீட்பு பணியில் தயார் நிலையில் சபரிமலை உள்ளது.

பல நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களின் முகத்தை காண முடிந்த நெகிழ்ச்சி தருணம்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள் பத்து நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை முதல் முறையாக கேமரா மூலம் காண முடிந்தது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். மேலும் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டதை அடுத்து தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிருடன் மற்றும் பாதுகாப்பாக இருப்பது உறுதியான பிறகு மீட்புப் பணி தீவிரமடைந்துள்ளது. அவர்களை பத்திரமாக மீட்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் …

பல நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களின் முகத்தை காண முடிந்த நெகிழ்ச்சி தருணம்!! Read More »

ஒரு வாரத்திற்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்கள்!! மீட்கும் முயற்சியில் தீவிரம்!!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கப்பாதை இடிந்து விழுந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அங்கு சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்க முடியவில்லை என்று மீட்பு படையினர் கூறினர். சுரங்கப் பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு சிறிய குழாய் மூலம் ஏற்கனவே தண்ணீர், உலர் உணவுப் பொருட்கள், ஆக்ஸிஜன், மருந்து பொருட்கள் போன்றவற்றை அனுப்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அவர்களுக்கு பெரிய குழாய் மூலம் சமைத்த உணவை வழங்கவும் முயற்சி செய்து …

ஒரு வாரத்திற்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்கள்!! மீட்கும் முயற்சியில் தீவிரம்!! Read More »

ஒரு வார நாட்களாக சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி தவிக்கும் அந்த 41 தொழிலாளர்களின் நிலைமை என்ன?? மேலும் மீட்பு பணி நிறுத்தப்பட காரணமும் அதன் பின்னணியும்!!

இந்தியா உள்ள உத்தரகாண்டில் Silkyara மற்றும் Barkot இடையே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12 அன்று விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் விபத்து நடந்த சுரங்கபாதையிலேயே சிக்கியும் அவர்களை இன்றளவிலும் மீட்க இயலவில்லை என்பது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. தீபாவளி திருநாளில் நாடே ஒளிமயமாக இருந்த அந்த நேரத்தில் இந்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதையின் இருளில் சிக்கி தவித்தது கவலைக்குறியதாக உள்ளது. மேலும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று …

ஒரு வார நாட்களாக சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி தவிக்கும் அந்த 41 தொழிலாளர்களின் நிலைமை என்ன?? மேலும் மீட்பு பணி நிறுத்தப்பட காரணமும் அதன் பின்னணியும்!! Read More »

உத்தரவை மீறிய விவசாயிகள்!! விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

நவம்பர் 16ஆம் தேதி அன்று இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 509 ஆக பதிவானது. இது மிகவும் ஆபத்தானதாக வகைப்படுத்தப்பட்டது. புதன்கிழமை அன்று ஏற்பட்ட பண்ணைத் தீயால் நிலைமை மிகவும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் காற்று மிகவும் மாசுடைந்துஇருப்பதால்பயிர் எச்சங்களை எரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால் இந்த தடையை மீறி பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் செயல்பட்டுள்ளனர். சுமார் 2500க்கும் மேற்பட்ட பண்ணையில் பயிர் எச்சங்களை எரித்துள்ளனர். இதனால் நச்சுப் புகையானது காற்றில் …

உத்தரவை மீறிய விவசாயிகள்!! விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? Read More »

கந்த சஷ்டி விரதத்தில் செய்யக்கூடாத தவறுகள்!!

”கந்த சஷ்டி விரதம் 2023′‘ சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது பழமொழி இதன் உண்மையான பொருள்:சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகச் சிறந்த விரதம் ஆகும். கந்த சஷ்டி என்பது:முருகக்கடவுள் சூரனை அளித்த ஒரு விழாவாகம் சஷ்டி என்பது ஆறு ஆகும். விரதம் துவங்கும் நாள்:நவம்பர் 13-ஆம் தேதி ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் ஆறு நாட்கள் ஆகும். விரதம் தரும் …

கந்த சஷ்டி விரதத்தில் செய்யக்கூடாத தவறுகள்!! Read More »

எப்போது நாம் மீட்கப்படுவோம் என்று காத்திருக்கும் 40 உயிர்கள்!! நான்கு நாட்களுக்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் பரிதாபம்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் 40 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். நான்கு நாட்களுக்கும் மேலாக இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றுவதில் பல சிக்கல்கள் இருப்பதால் மீட்புப் பணி தாமதமாகிறது என்று தெரிவிக்கப்பட்டது. சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை தொடர்பு கொண்டதில் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு உணவு, தண்ணீர் …

எப்போது நாம் மீட்கப்படுவோம் என்று காத்திருக்கும் 40 உயிர்கள்!! நான்கு நாட்களுக்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் பரிதாபம்!! Read More »

2023 கிரிக்கெட் உலக கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எது ??

இந்தியா VS நியூசிலாந்து : நேற்று நவம்பர் 15 , இந்தியா VS நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2023 கிரிக்கெட் உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியானது மும்பையில் உள்ள வான்கடோ மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் டாஸை ரோஹித் ஷர்மா வின் தலைமையிலான இந்திய அணி வென்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியானது , கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஹீப்மான் பார்ட்னர்ஷிப் முறையில் தனது ஆட்டத்தை தொடங்கியது. ஆரம்ப ஆட்டமானது அமர்க்கலமாக தொடங்கப்பட்டாலும் …

2023 கிரிக்கெட் உலக கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எது ?? Read More »

தமிழ்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்திய “ஒரு மகத்தான போராளியின் மரணம்”!!

இன்று நவம்பர் 15 , சுதந்திர போராட்டத் தியாகி தகைசால் தமிழர் சங்கரய்யா (102) காலமானார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யா , உடல் நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் இயற்கை எய்தினார். இது தமிழக மக்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் பெரும் இழப்பாக கருத்தப்படுகிறது. ஜூலை 15 ,1921 – கோவில்பட்டியில் நரசிம்மலு மற்றும் ராமானுஜம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் N. சங்கரய்யா …

தமிழ்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்திய “ஒரு மகத்தான போராளியின் மரணம்”!! Read More »