#coronavirus

Latest Tamil News Online

சிங்கப்பூரில் மீண்டும் கோவிட்-19!

சிங்கப்பூரில் இவ்வாண்டு கோவிட்-19 தொற்றால் மருத்துவமனைகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி உள்ளது. அன்றாட சராசரி எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட்-19 கிருமி தொற்றால் இந்த மாதம் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 275. அதற்கும் முந்தைய வாரத்தைவிட அதன் விழுக்காடு அதிகமாகி உள்ளது. ஏறக்குறைய 30 விழுக்காடு அதிகம். தீவிரச் சிகிச்சை பிரிவில் […]

சிங்கப்பூரில் மீண்டும் கோவிட்-19! Read More »

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை?

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.92 கோடி! சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 92 லட்சத்து 76 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரத்து 986

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை? Read More »

வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விடுதியில் இருந்தவாறே குணமடையலாம்!

சிங்கப்பூரில் மார்ச்,1-ஆம் தேதி முதல் தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் மேலும் தளர்த்தப்படும். வெளிநாட்டு ஊழியர்களுக்கான வழிகாட்டிகளும், சமூகப் பொது வழிகாட்டிகளும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். இனி,கோவிட்-19 பரிசோதனை நோய்த்தொற்று அறிகுறிகள் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் அவர்கள் விடுதியிலிருந்து குணமடையலாம்.பிப்ரவரி,13ஆம் தேதியிலிருந்து DORSCON எச்சரிக்கை நிலை நிறம் பச்சை நிறத்துக்கு மாற்றப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதி அட்டையைச்

வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விடுதியில் இருந்தவாறே குணமடையலாம்! Read More »

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மாற்றம்! பணிக்குழு தேவை இருக்காது!

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவிட்-19 கிருமி பரவலைக் கட்டுப்படுத்தவும் அதற்கான நடவடிக்கைகளை முடிவு செய்ய பணிக்குழு தொடங்கப்பட்டது. இந்த பணிக்குழு அரசாங்கம் ஒருங்கிணைந்த முறையில் துரிதமாக நடவடிக்கை எடுக்க தொடங்கப்பட்டது. சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் பச்சை நிறமாக மாறப் படுவதால், இனி இந்த குழு செயல்படாது.அதற்கான தேவையும் இருக்காது. சுகாதார அமைச்சகம் கோவிட்-19 சூழலைக் கையாளும்.நாட்டில் ஒரு வேளை கிருமி பரவல் அதிகரித்தால் அந்த சூழலைச் சமாளிக்க ஏற்ப குழு அமைக்கப்படும்.இந்த பணிக்குழு

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மாற்றம்! பணிக்குழு தேவை இருக்காது! Read More »

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமையிலிருந்து தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்!

சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமி பரவல் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டிலிருந்து படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி 13-ஆம் தேதியிலிருந்து இன்னும் சில கட்டுப்பாடுகள் தளரத்தப்பட உள்ளது. • பொதுப் போக்குவரத்தில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டாம். • சிங்கப்பூரின் DORSCON எச்சரிக்கை நிலை நிறம் பச்சையாக மாற்றப்பட்டுள்ளது. • கோவிட்-19 பரிசோதனைக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்படும்.அதேபோல் சிகிச்சைக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்படும். • வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் விடுதியில் இருந்தவாறு குணமடையலாம்.

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமையிலிருந்து தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்! Read More »

சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை!

சிங்கப்பூரில் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமைலிருந்து பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிந்துக் கொள்ள தேவையில்லை. இனி சுகாதார, பராமரிப்பு நிலையங்களின் உட்புறங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய தேவையில்லை. தற்போது சிங்கப்பூரில் Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.அதில் ஒரு கட்டமாக, முகக்கவசத்தைப் பொது போக்குவரத்து இடங்களில் கட்டாயமாக அணிய தேவையில்லை என்று அறிவித்துள்ளது.சற்றுமுன் இதனைச் சுகாதார அமைச்சகம் அறிவித்தது. ஒரு சில இடங்களில் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது,மருத்துவமனை வார்டுகள்,மருந்தகங்கள்,செவிலியர் இல்லங்கள் போன்ற இடங்களில்

சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை! Read More »

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி

சிங்கப்பூரில் இன்று முதல் ஒருங்கிணைந்த பரிசோதனை தடுப்பூசி நிலையங்களில் எல்லா வயதினரும் முன் பதிவு இன்றி தடுப்பூசி போட்டுகொள்ளலாம். பிள்ளைகளுக்கான தடுப்பூசி நிலையங்களுக்கும் அது பொருந்தும்.இதற்கு முன் அத்தகைய தடுப்பூசி நிலையங்களில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் மட்டுமே முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இனி திங்கட்கிழமைகளிருந்து சனிக்கிழமைகள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் நேரடியாக நிலையங்களுக்கு செல்ல முடியும்.எண்பது வயதுக்கு ஏற்பட்ட மூத்தோர் பலதுறை மருந்தகளிலும், பொது சுகாதார ஆய்வு நிலை மருந்தகளிலும் முன் பதிவின்றி தடுப்பூசி

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி Read More »

Exit mobile version