“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்ற ஸ்டைலில் மூன்றாண்டுகளுக்கு பிறகு சாங்கி விமான நிலையத்தில் பிரமாண்டமாக திறக்கப்படும் McDonald’s…
சிங்கப்பூர் வாழ் மக்கள் அனைவரும் தங்கள் வார இறுதி நாட்களில் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் வந்து உணவருந்தும் இடங்களில் பிரபலமான McDonald’s ரெஸ்டாரண்டும் ஒன்று. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலும் இயங்கி வந்த மெக்டொனால்ட்ஸ் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு விரும்பி உணவு அருந்தும் பல மக்களுக்கும் இது ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் தற்பொழுது கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாங்கி விமான நிலையத்தின் …