மோசமான வானிலை காரணமாக கிறிஸ்துமஸ் மரம் விழுந்ததில் பெண் பலி!!

டிசம்பர் 21ஆம் தேதியன்று வீசிய கடும் புயல் காரணமாக பெல்ஜியம் கிறிஸ்துமஸ் சந்தையில் 20 மீட்டர் உயரம் உள்ள கிறிஸ்துமஸ் மரம் விழுந்தது. இதில் 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பெண்கள் காயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மூவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மரம் சரியாக வைக்கப்பட்டிருந்ததா என்பதை உறுதி செய்யவும், வானிலை தாக்கம் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோசமான வானிலை காரணமாக கிறிஸ்துமஸ் மரம் விழுந்ததில் பெண் பலி!! Read More »