உயிருள்ள பன்றிகள் இந்தோனேஷியாவின் புலாவ் புலான் பகுதி தீவிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
அதனை சிங்கப்பூர் தற்போது நிறுத்தி இருக்கிறது.
அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சில பன்றிகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் சிங்கப்பூரில் அறுத்து விற்கப்படும் பன்றி இறைச்சி விநியோகத்தில் தற்காலிக இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளன.இதனைச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
வெட்டுக் கூடத்தில் அறுக்கப்பட்ட பன்றிகளின் இறைச்சிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சிங்கப்பூரில் இருக்கிற பன்றி இறைச்சியை சாப்பிடுவது பாதுகாப்பானது.
ஆப்பிரிக்க பன்றி இறைச்சி மனிதர்களைப் பாதிக்காது. உணவு பாதுகாப்புக் குறித்த கவலை தேவையில்லை என்று ஆணையம் கூறியது.
சிங்கப்பூரில் விற்பனையாகும் மொத்த பன்றி இறைச்சியில் 15 விழுக்காடு புலாவ் புலானிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை.