சிங்கப்பூரில் பொது இடங்களில் வேண்டுமென்றே தீ வைத்த சந்தேக நபர்!!
சிங்கப்பூர்:
பொது இடங்களில் பல முறை வேண்டுமெனன்றே தீ வைத்ததாக 23 வயது ஆடவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத நபரால் பொது இடங்களில் அடுத்தடுத்து இரண்டு முறை தீச்சம்பவங்கள் ஏற்பட்டன.
இச்சம்பவம் குறித்து ஜூலை 25 – தேதி காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தது.
அந்த நபர் யீஷீன் ஸ்ட்ரீட் 11 இல் உள்ள பிளாக்கின் படிக்கட்டடுகளுக்கு அருகே தீ வைத்தாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டது.
விசாரணை மற்றும் அங்கிருந்த கண்காணிப்பு கோமராக்களின் உதவியோடு சந்தேக நபரின் அடையாளங்களைக் கண்டறிந்தனர்.
காவல்துறையினரால் ஜூலை 31-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றஞ்சாட்டப்படும்.
ஆடவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg