சிங்கப்பூரில் நடத்தப்பட்ட திடீர் சோதனை...!!! வேலை முறைகேட்டில் ஈடுபட்ட 32 பேர் கைது...!!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் வேலை தொடர்பான குற்றங்களுக்காக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனிதவள அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் போலீஸ் படை அதிகாரிகள் 27 இடங்களில் நடத்திய திடீர் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
இக்குற்றத்தில் கைதான 33 வயதுடைய ஆடவர் 28 சட்டவிரோத கேளிக்கை விடுதிகளை நடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் நபர்கள் அந்த அரங்குகளில் நிகழ்ச்சிகளை நடத்தியது தெரிய வந்துள்ளது.
பணி அனுமதி விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாக 16 ஆண்களும்,15 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிங்கப்பூரில் பணிபுரிய தடை விதிக்கப்படும்.
இம்மாதிரி சட்டவிரோதமான முறையில் அனுமதியின்றி பணிபுரியும் வெளிநாட்டவருக்கு 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Follow us on : click here