கோடை வெயில்.... கருகிய பயிர்.... விவசாயி செய்த செயல்...!!!!
ஜப்பானில் 200 கிலோகிராம் வெங்காயத்தாளை திருடியதாக விவசாயி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோடை வெயிலில் பயிர்கள் கருகியதால் அவர் இழந்த நஷ்டத்தை ஈடு செய்ய மற்றொரு விவசாய நிலத்திலிருந்து வெங்காயத்தாளை திருடியுள்ளார்.
திருடப்பட்ட வெங்காயத்தாளின் மதிப்பு 200,000 யென் (1,740 வெள்ளி) ஆகும்.
இதனால் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
சாதகமற்ற காலநிலையைக் காரணம் காட்டி, இழந்த வருமானத்தை மீட்பதற்கான அவரது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
28 வயதான விவசாயிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
மேலும் அவருக்கு 3 ஆண்டுகள் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here