சம்மர் வந்திருச்சு…!!!சருமத்தை பாதுகாக்க இந்த ஜூஸை கண்டிப்பாக குடிங்க…!!!

சம்மர் வந்திருச்சு...!!!சருமத்தை பாதுகாக்க இந்த ஜூஸை கண்டிப்பாக குடிங்க...!!!

கோடை காலம் வந்து விட்டாலே கொளுத்தும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும். கடும் வெயிலால் உடலில் உள்ள நீர் அனைத்தும் வியர்வை வழியாக வெளியேறும். இதனால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம். தினமும் 3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிப்பது அவசியம். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். மேலும் நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழச்சாறு, நுங்கு சர்பத் மற்றும் தேங்காய் தண்ணீர் குடிப்பது போன்றவை கோடையில் ஏற்படும் சருமப் பிரச்சினைகளைக் குணப்படுத்தும். நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றி பயன் பெறவும்.

இளநீர்

கோடைக்காலத்தில் இளநீர் குடிப்பதை அதிகரிக்க வேண்டும். இளநீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகின்றன.

மோர்

மோரை தினமும் குடிப்பது உடலில் நீர்ச்சத்து குறையும் அபாயத்தைக் குறைக்கும். கோடைகால வெப்பத்தைத் தணிக்க மோர் ஒரு சிறந்த பானம்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழையின் குளிர்ந்த ஜெல்லை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்து குடித்தால்,உடல் குளிர்ச்சியாக இருக்கும்.இந்த கற்றாழை சாறு அனைத்து தோல் பிரச்சினைகளையும் குணப்படுத்த வல்லது.

எலுமிச்சை ஜூஸ்

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு எலுமிச்சையின் சாற்றைப் பிழிந்து, அதனுடன் தேனைக் கலந்து குடிப்பது உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க உதவும்.

வெள்ளரிக்காய் சாறு

பழுத்த வெள்ளரிக்காயிலிருந்து சாறு தயாரித்து குடித்தால், உடல் வறட்சி நீங்கும். இந்த வெள்ளரிக்காய் சாறு உங்கள் சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க உதவுகிறது.

மூலிகை பானம்

புதினா, துளசி போன்ற குளிர்ச்சியூட்டும் மூலிகை இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைத்து, தேனுடன் கலந்து குடிப்பது உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

தர்பூசணி ஜூஸ்

தோல் பிரச்சனைகளைத் தவிர்க்க தினமும் ஒரு கிளாஸ் தர்பூசணி ஜூஸ் குடிக்கவும். உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க தர்பூசணி ஜூஸ் உதவும்.அதேபோல், பாதாம் பிசின் மற்றும் நன்னாரி எசென்ஸைப் பயன்படுத்தி சிரப் தயாரித்து குடித்தால், கோடையில் சருமப் பிரச்சினைகள் ஏற்படாது.