“இயற்கை பேரிடர்களை சமாளிக்க வேலை இடங்களில் பரிந்துரைக்கப்படும் அறிவுரைகள்”
சிங்கப்பூர்: பலத்த காற்று மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள பணியிடங்கள் தயாராக இருக்குமாறு மனிதவள அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வேலை இடங்களுக்கு அமைச்சகம் பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.
ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பணியிடங்களில் ஏற்படும் ஆபத்துகளைச் சமாளிக்க அமைச்சகம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இயற்கை பேரிடர்களை சமாளிப்பதற்கு முன் திட்டமிடல் அவசியம் என்பதால் இது போன்ற பரிந்துரைகள் மிகவும் உதவியாக இருக்கும்.
ஆபத்து காலங்களில் பணியை நிறுத்துதல் மற்றும் பணியிடத்தில் இருந்து பணியாளர்களை வெளியேற்றுதல் போன்ற பரிந்துரைகளும் இதில் அடங்கும்.
மீட்புத் திட்டத்தைத் தயாரிப்பது, வானிலை பாதிக்கப்பட்ட கட்டமைப்பு மற்றும் வெளிப்புற உபகரணங்கள் போன்றவை சரிபார்ப்பது, வானிலை மாற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பது போன்றவை அடங்கும்.
மேலும் பணியாளர்களுக்கு அபாயகரமான சூழ்நிலைகளைக் கண்டறிந்து தகவல் தெரிவிப்பது குறித்து பயிற்சி அளிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
இது போன்ற முன் திட்டமிடல் கொள்கையினால் ஏற்படும் பெரிய உயிர் இழப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்கலாம்.
Follow us on : click here