மிகவும் பிரபலமான BTS இசைக்குழுவைச் சேர்ந்த சுகா!! மதுபோதையால் கிடைத்த அபராதம்!!

மிகவும் பிரபலமான BTS இசைக்குழுவைச் சேர்ந்த சுகா!! மதுபோதையால் கிடைத்த அபராதம்!!

சியோலில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் பிரபலமான இசைக்குழுவைச் சேர்ந்த சுகா மதுபோதையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டியுள்ளார். அதனால் அவருக்கு 11,500 அமெரிக்கா டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மது அருந்தி விட்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டக் கூடாது என்பதை மறந்து விட்டதாக சுகா கூறியதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சுகா தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார்.மேலும் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தார்.