பிரேசிலில் கனமழையால் கணிசமான சேதம் மற்றும் இழப்பு!!

பிரேசிலில் கனமழையால் கணிசமான சேதம் மற்றும் இழப்பு!!

பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் பெய்த கனமழையால் கணிசமான சேதம் மற்றும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 21 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநில கவர்னர் எடுவார்டோ லைட், இது அவர்களின் வரலாற்றில் மிக மோசமான பேரழிவு என்று கூறினார்.மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார்.

ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மே 2 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

புயல்கள் பாலங்கள், சாலைகள் மற்றும் நகரங்களை அழித்துள்ளன.

பலத்த புயலால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 114 பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 3,400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என அரசு எச்சரித்துள்ளது.