தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!!

தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கூட்டுறவு நிறுவனங்கள் போன்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகன சார்ஜர்களை பொருத்துவதற்கு வழங்கப்படும் இணை மானியம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

மேலும் 3,500 சார்ஜிங் சாதனங்களுக்கு உதவும் வகையில் EV பொது சார்ஜிங் மானியம் விரிவுபடுத்தப்படும் எனக் கூறினார்.

இது முன்னர் இருந்த 2,000 சார்ஜிங் சாதனங்களின் வரம்பிலிருந்து அதிகமாகும்.

சார்ஜர்கள் பொருத்தும் செலவில் பாதியை மானியம் மூலம் பெறலாம்.

ஒரு கருவிக்கு அதிகபட்சமாக 3,000 வெள்ளி வரை கேஷ்பேக் பெற முடியும்.

இந்த மானியஅறிவிப்பானது 2021 இல் தொடங்கப்பட்டது.

அதன்படி 500க்கும் மேற்பட்ட தனியார் அடுக்குமாடி வீடுகளில் தற்போது சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று டாக்டர் கோர் கூறினார்.