சிங்கப்பூரில் பிரம்மிக்க வைக்கும் கட்டிடக்கலை..!!! பான் பசிபிக் ஹோட்டலுக்கு கிடைத்த விருது...!!!!
சிங்கப்பூர்:உலகின் மிக அழகான ஹோட்டல்களில் ஒன்றாக சிங்கப்பூரின் பான் பசிபிக் ஆர்ச்சர்ட் ஹோட்டல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Prix Versailles எனும் யுனெஸ்கோ கட்டிடக்கலை விருதானது விமான நிலையங்கள், அருங்காட்சியகங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உட்பட 8 பிரிவுகளை அங்கீகரிக்கிறது.
புதிதாக திறக்கப்பட்ட 16 அழகான ஹோட்டல்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
அவற்றில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்ட பான் பசிபிக் ஆர்ச்சர்ட் ஹோட்டலும் ஒன்று.
ஹோட்டல் புதுமையான வடிவமைப்பு… நவீன சூழலில் உள்ளூர் பாரம்பரிய அம்சங்கள்… நிலைப்புத்தன்மை போன்ற தன்மையினால் பான் பசிபிக் ஆர்ச்சர்ட் ஹோட்டலுக்கு விருது வழங்கப்பட்டது.
Prix Versailles விருதை சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கையா கட்டிடம் மற்றும் சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 2 ஆகியவையும் வென்றன.
தென் கொரியாவின் யோங்வோலில் அமைந்துள்ள The Hanok Heritage House கிடைத்தது. Ned Doha உட்புறத்திற்கான சிறப்புப் பரிசை வென்றது.அதே நேரத்தில் ஏதென்ஸில் உள்ள Dolly வெளிப்புறத்திற்கான சிறப்புப் பரிசை வென்றது.
Follow us on : click here