Latest Singapore News

சிங்கப்பூரில் இஸ்லாமிய தேசத்தை உருவாக்க நினைத்த மாணவர்!

சிங்கப்பூரில் 18 வயதுடைய மாணவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார். இவர் சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாதம் உணர்வை வளர்த்துக் கொண்டுள்ளார்.

கடந்த 2020-ஆம் முதல் youtube தளத்தின் மூலம் தீவிரவாதத்தை வளர்க்கும் வகையான பதிவிட்டுகளைப் பார்த்து வந்துள்ளார். அதில் முக்கியமாக zakir naik எனும் சமயபோதகர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டத்தையும் பார்த்து வந்துள்ளார். இவரைப் போன்ற சமயபோதகர்களின் சொற்பொழிவு உரையை youtube தளத்தில் பார்த்து வந்துள்ளார்.

உள்நாட்டு தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்ட 18 வயதுடைய மாணவர் பெயர் Muhammad Irfan Danyal mohamad Nor.இவர் பள்ளிவாசலில் உள்ள இடுகாடு, ராணுவ முகாம் உள்ளிட்ட இடங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவர் வெளியூருக்குச் சென்று வன்முறையில் ஈடுபடவும் நினைத்துள்ளார்.இவர் ஐ.எஸ். அமைப்பில் சேரவும் நினைத்துள்ளார். அதற்காக தன் உயிரைக் கொடுக்கவும் முடிவெடுத்துள்ளார்.ஐ.எஸ். அமைப்பின் பிரச்சாரங்களைத் தெரிந்துக் கொண்டுள்ளார். அதன்பின் பல்வேறு விவாதங்களிலும் சமூக வலைத்தளம் மூலம் ஈடுப்பட்டுள்ளார்.

இவர் ஷியா முஸ்லீம்கள்,இஸ்லாமியர் அல்லதோர்,சுஃபி ஆகியோரைத் தாக்கவும் திட்டமிட்டுள்ளார்.தேசிய மாணவர் படை தலைமை மையம் அங் மோ கியோவில் அமைந்துள்ளது.அங்கும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.Haji Muhammad Salleh என்ற மசூதி இஸ்லாமிய முறைப்படி இல்லை என்று இவர் கருதியுள்ளார்.இதனால் அதனைக் குண்டு வைத்துத் தகர்த்தவும் திட்டமிட்டுள்ளார்.

இணையத் தளத்தில் கையேடு ஒன்றையும் பதிவிறக்கம் செய்துள்ளார். வீட்டில் குண்டு தயாரிப்பது எப்படி என்ற கையேடாகும்.

Irfan உயர்நிலைக்குப் பிந்திய மேல்கல்வி மாணவர்.இவர் சொந்தமாகத் தீவிரவாத எண்ணங்களை வளர்த்துக் கொண்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.Irfan ஐ. எஸ். அமைப்பின் பிரச்சாரத்தைக் கேட்டு தானாக தனித்து இயங்கி வந்துள்ளார் என்று உள்நாட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் இஸ்லாமிய தேசத்தையும் உருவாக்க நினைத்துள்ளார்.சிங்கப்பூர் வடகிழக்கு கரைக்கு தொலைவில் உள்ள கோனி தீவில் உருவாக்க நினைத்துள்ளார்.அதற்கு “Islamic State of Singhafura´´ என்ற பெயரைச் சூட்டவும் நினைத்துள்ளார்.

ஐ.எஸ்.அமைப்பின் உறுப்பினர் போல் வேடமிட்டு புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

இதனை சமூக தளங்களிலும் பதிவிட்டுள்ளார். அதன்பின்,அமைப்புக்கு ஆதரவு திரட்டி மற்றவர்களையும் ஊக்குவித்து வந்துள்ளார்.

சிங்கப்பூரில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.500 பேர் கொண்ட தீவிரவாதப் படையை உருவாக்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளதாக சிங்கப்பூர் உள்நாட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.