ஜாக்கிங் போனவரை துரத்திய தெரு நாய்கள்!!

நவம்பர் 4ஆம் தேதி அன்று Pasir Ris Drive 3 வழியாக jogging சென்ற நபரை 5 தெரு நாய்கள் குரைத்துக் கொண்டே துரத்தின.

இந்த சம்பவம் குறித்த வீடியோ TikTok-ல் பகிரப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து Animal and Veterinary Services-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தெருநாய்கள் சுற்றித் திரியும் பகுதியை கண்காணிப்பதாகவும், அவற்றை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் AVS-ன் இயக்குனர் கூறினார்.

மேலும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்தடை செய்யப்பட்ட நாய்களை வேறு இடங்களுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியது.அல்லது அப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால்,குடியிருப்பு பகுதிகளுக்கு அப்பால் விடுவிக்கப்படும் என்றும் AVS கூறியது.

இது போன்ற தெருநாய்களை பார்த்தால் பொதுமக்கள் மெதுவாக விலகிச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.