இந்த வருடம் பிப்ரவரி மாதம் மட்டும் Serangoon, Ang Mo Kio மற்றும் Jalan Kayu ஆகிய பகுதிகளில் சுமார் 30 பூனைகளை, 3 தெரு நாய்கள் சேர்ந்து கடித்துக் கொன்றதாக பூனைகளுக்கு உணவளிப்போர் கூறினர்.
இந்த தெருநாய்கள் முதலில் Ang Mo Kio-வில் தென்பட்டதாகவும், பிறகு Paya Lebar பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், மொத்தம் 50 பூனைகளைக் கொன்று இருக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நாய்கள் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலரை துரத்தியதாகவும், அவர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்ததாகவும் கூறப்படுகிறது.
Animal and Veterinary Services, இந்த தெரு நாய்களை பிடிக்க பொறிகளை பயன்படுத்தி வருவதாகவும், அது அவ்வளவு எளிதல்ல என்றும் கூறியது.
அந்த மூன்று நாய்களில் இரண்டு நாய்களைப் பிடித்ததாகவும், அவற்றை பராமரித்து வருவதாகவும், விலங்குகள் நல குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் Animal and Veterinary Services தெரிவித்தது.
மூன்றாவது நாயை விரைவில் பிடிப்பார்கள் என தான் நம்புவதாக பூனைகளுக்கு உணவளிக்கும் ஒருவர் தெரிவித்தார்.