STR 49 சிலம்பரசனின் அடுத்த சரவெடி ரெடி..!!

STR 49 சிலம்பரசனின் அடுத்த சரவெடி ரெடி..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு கம் பேக் கொடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் தனது 48 வது படமான STR 49 இல் நடிக்க உள்ளார். இந்தப் படம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் AGS என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகிறது .இந்நிலையில், இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் STR 49 படத்திற்காக அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், இந்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என்றும் கூறப்படுகிறது.STR 49 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கயாது லோகர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை காயது லோஹர் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்றார்.அந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் இதயங்களிலும் இடம் பிடித்துள்ளார். டிராகன் படத்திற்கு பிறகு கயாது லோகருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது.இந்நிலையில், சிம்புவுக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மேலும், காயது லோஹர் அதர்வாவுடன் ‘இதயம் முரளி’ படத்திலும் நடிக்கிறார். மேலும் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.