கரையை கடந்த புயல்….. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்…….

சீனாவில் Haikui சூறாவளி கரையை கடக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. Haikui சூறாவளி Fujian மாநிலத்தில் கரையை கடந்துள்ளது. சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளும் மூடப்பட்டது.

பாதுகாப்பான இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்பு குழுவினர் தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Haikui சூறாவளி காரணமாக பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டது. அதோடு கடல் அலைகள் 3 முதல் 5 மீட்டர் வரை உயரும் என கூறப்பட்டிருந்தது.

சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அழைத்து செல்லப்பட்டன.அங்கு பல பகுதிகளில் 24 மணி நேரத்தில் 300mm மழையின் அளவு பதிவாகி உள்ளது.