சிங்கப்பூரின் முதல் தாவரவியல் பூங்காவை நிறுவியவர்களுக்கு சிலை!!

சிங்கப்பூரின் முதல் தாவரவியல் பூங்காவை நிறுவியவர்களுக்கு சிலை!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஃபோர்ட் கேனிங்(fort canning) பூங்காவில் இரண்டு வெண்கல சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.

அவை சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் மற்றும் டேனிஷ் தாவரவியலாளர் நதானியேல் வாலிச் இருவருடைய சிலை.

இவர்கள் இருவரும் இணைந்து சிங்கப்பூரின் முதல் தாவரவியல் பூங்காவை நிறுவினர்.

மேலும் இருவரும் மிகச் சிறந்த நண்பர்கள்.

திரு.ராபில்ஸ் 1819 ஆம் ஆண்டு சிங்கப்பூரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
இவர் தனது நண்பரான வாலிச் உடன் இணைந்து சிங்கப்பூரின் முதல் தாவரவியல் பூங்காவை உருவாக்கினர்.

ஐரோப்பாவில் தாவர சேகரிப்புகளுக்கு விநியோகிக்கப்படுவதற்காக ஒரு பெரிய ஹெர்பெரியம் சேகரிப்பை உருவாக்கினார் திரு.வாலிச் அவர்கள்.

மேலும் தாவரவியல் மரபுடைமைகளுக்கு இவர்கள் ஆற்றிய பங்கு இன்றியமையாதது. சிங்கப்பூரின் தாவர வளர்ச்சி கழகமானது இருவரின் பங்களிப்பை போற்றும் வகையில் தேசிய பூங்கா கழகத்தால் இருவரது வெண்கல சிலைகளானது திறந்து வைக்கப்பட்டது.