அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஒரே இரவில் ஒரு சில பகுதிகளில் 12 சென்டிமீட்டருக்கு அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
மேலும் 17 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பொழிவை எதிர்பார்க்கலாம் என்று நியூயார்க் ஆளுநர் தெரிவித்தார்.
திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் ரயில் நிலையங்கள்,ஸ்ட்ரீட்கள், நெடுஞ்சாலைகள் மூழ்கின.
செப்டம்பர் 29-ஆம் தேதி நேற்று La Guardia விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவித்தது.
நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அவசரநிலை அறிவித்துள்ளது.
இந்த வெள்ள பெருக்கால் உயிரிழப்போ,காயமடைந்ததாகவோ தகவல் ஏதுமில்லை.
நியூஜெர்சியில் உள்ள ஹோபோகனில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டது.
நியூயார்க் மேயர் Eric Adams, மக்கள் கூடுதல் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.