இங்கிலாந்து VS இலங்கை : உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 25 – ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து VS இலங்கை அணி மோதியது . பெங்களூரு M . சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்கத்தில் , என்னதான் டாஸ் – ஐ இங்கிலாந்து அணி வென்றாலும் ஆட்டநாயகர்கள் என்னவோ இலங்கை அணி தான்.
மேலும் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்கு , இலங்கையின் பந்துவீச்சு சற்று பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இலங்கையின் அபார பந்துவீச்சுக்கு , பதிலடி கொடுக்கும் முயற்சியில் ஆட்டத்தை மேற்கொண்டார் ஸ்டோக்ஸ் இருப்பினும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
லஹிரு குமாரா, ரஜிதா மற்றும் மேத்யூஸ் மூவரின் பந்துவீச்சுக்கு பல விக்கெட்டுகளை இழந்து தவித்தது இங்கிலாந்து அணி. மேலும் தொடர் 10 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பாதையில் தள்ளப்பட்டது.
இதனால் இங்கிலாந்து 33.2 ஓவர்களில் 156/10 ரன்களுடன் பேட்டிங்கை முடித்தது.” இது வெறும் ட்ரைலர் தான்!! இனிமேதான் எங்க ஆட்டமே” என்பது போல வெறும் 157 ரன்களை நோக்கி பேட்டிங்கை கையில் எடுத்தது இலங்கை அணி.
ஆரம்பத்தில் ஆட்டம் என்னவோ சூடுபிடிக்கவில்லை.இருப்பினும் பதும் நிஷாங்கா – வின் ஆட்டத்தில் அதிர்ந்து போனது எதிரணி. மேலும் சமர விக்ரமா – வின் ஆட்டமும் அணியை வெற்றியின் பக்கம் அழைத்து சென்றது. இருவரும் சேர்ந்து முறையே 77 மற்றும் 65 ரன்களை குவித்து களத்தை களைக்கட்ட செய்தனர்.
இறுதியில் 25.4 ஓவர்களில் 160/2 என்ற ரன் கணக்கில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி வாகையை இலங்கை சூடியது. மேலும் உலக கோப்பை போட்டிக்கான முன்னேற்ற பாதையின் 5 – ஆவது இடத்தில் கால் பதித்தது இலங்கை.