சீனாவில் கைகளில் உறை இல்லாமல் எந்த கருவியும் இல்லாமல் மலையேறும் சிலந்திப் பெண்…!!

தென்மேற்கு சீனாவில் உள்ள குய்ஸோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லுவோ டெங்பின்.43 வயது வயதாகும் இந்த பெண்மணிக்கு “சீன சிலந்திப் பெண்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இவர் கைகளால் பாறைகளில் ஏறும் பழங்கால மியாவ் பாரம்பரியத்தை போன்று மலையேறுபவர் என்று கூறப்பட்டது.

இவர் கைகளில் உறையும் அணியாமல் எந்த பாதுகாப்பு கருவியும் இல்லாமல் 100 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள பாறைகளில் சாதாரணமாக ஏறுவது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

லுவோ தனது 15 வயதில் தனது தந்தையிடம் பாறை ஏற கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

இவர் இரண்டு முக்கிய காரணங்களுக்காக மலையேற வேண்டும் என்று நினைத்ததாக கூறினார்.

ஆண்களை விட பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவும், மூலிகை மருந்துகளை எடுத்து வந்து வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவும் இவரது பயணம் தொடங்கியதாக கூறினார்.

லுவோ 30 மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு சமமான 108 மீட்டர் உயரமுள்ள பாறையில் திறம்பட எறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இவரின் இந்த அசாத்திய திறமையால் இவர் “சிலந்திப் பெண்” என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.