பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்!!
பொன்னமராவதி, பிப்.18-
பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்: சமூக ஆர்வலர்கள் வரவேற்பு.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை,சிசேரியன் அறுவைச் சிகிச்சை,24 மணி நேரமும் சுகப்பிரசவம் செய்யும் அரசு மருத்துவர்கள்.
பொன்னமராவதியை சுற்றியுள்ள 42 கிராமங்களுக்கும் முதன்மை மருத்துவமனையாக ( GH )அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனை இருந்து வருகிறது. இம்மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சைகளை செய்து வருகின்றனர்.
மேலும் சிறப்பு சிகிச்சைகளான எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை,சிசேரியன் அறுவைச் சிகிச்சை மற்றும் 24 மணி நேரமும் சுகப்பிரசவம்,தோல், காது மூக்கு தொண்டை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம் என பல்வேறு வகையான சிகிச்சைகளை செய்து வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு அவசர சிகிச்சைகள்,விஷ முறிவு சிகிச்சைகள் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சைகள், தீவிர சிகிச்சைகளுக்கு மட்டும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றும் செய்தி குறிப்பில் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இம்மருத்துமனையில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் மற்றும் காதொலி கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.