பொன்னமராவதியில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!!
பொன்னமராவதி,ஜன.11-
பொன்னமராவதி அருகே வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரம் ஸ்ரீம் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அனுமன் ஜெயந்தியும் நடைபெற்றது..
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரம் ஸ்ரீம் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் மாத அமாவாசையை முன்னிட்டு வாஞ்சா கல்பலதா கணபதிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனுமனுக்கு பூஜைகள் நடைபெற்றது.
இதில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சிவாச்சாரியர்கள் யாகத்தில் வளர்க்கப்பட்ட புனிதநீர் குடத்தை கோவிலை சுற்றி வலம் வந்து வாஞ்சா கல்பலதா கணபதிக்கு ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்மாலை அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பித்தனர்.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சென்னை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஸ்ரீம் அகத்தியர் சிவசித்தர் ஐயா அவர்களால் ஐந்து வகை பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்பு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. .