தெற்கு தாய்லாந்தில் பல நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.டிசம்பர் 22ஆம் தேதியன்று தொடங்கிய வெள்ளம் தாய்லாந்தின் பல பகுதிகளில் உள்ள சுமார் 70,000க்கும் அதிகமான வீடுகளை சேதப்படுத்தியது.
இந்த வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் அப்பகுதிகளில் வெள்ள நீர் ஓரளவு வடிந்ததை அடுத்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.
வெள்ளம் காரணமாக சில நாட்கள் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
காலநிலை மாற்றம் மழைப் பொழிவை இன்னும் தீவிரமாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.