டிசம்பர் 4ஆம் தேதியன்று அதிகாலை தெற்கு பிலிப்பைன்ஸின் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.
ஏற்கனவே, நிலநடுக்கங்களை அப்பகுதி மக்கள் சந்தித்துள்ளனர். அதனால் மக்கள் அனைவரும் அமைதியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இதே பகுதியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.6 மற்றும் 6.6 ஆக பதிவாகி உள்ளது.
இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.சனிக்கிழமை அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.பலர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.