அறிமுகம் கண்ட தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில்……

தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயிலை இந்தோனேஷியா ஆகஸ்ட் 2-ஆம் தேதி திங்கட்கிழமையன்று அறிமுகப்படுத்தியது.

சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவிலான Jakarta மற்றும் Bandung பகுதிகளுக்கு இடையே இந்த ரயில் சேவை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Whoosh எனப்படும் இந்த அதிவேக ரயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவித்தனர்.

இந்த அதிவேக ரயிலில் ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட 600 பேர் பயணிக்க முடியும் என்று கூறினர்.

இந்த அதிவேக ரயில் சேவை மூலமாக Jakarta மற்றும் Bandung பகுதிகளுக்கு இடையிலான பயண நேரம் மூன்று மணி நேரத்தில் இருந்து 45 நிமிடமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியா சீனாவுடன் இணைந்து பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த புதிய அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தியது.

தொடக்கத்தில் இந்த திட்டம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான செலவில் அமைக்கப்பட்டது.

ஆனால் கட்டுமான சவால்கள் மற்றும் கோவிட்-19 காரணமாக இந்த திட்டம் தாமதமானதாகவும், செலவுகள் அதிகரித்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த அதிவேக ரயில் சேவை விரைவில் செயல்பட இருப்பதால், அதிகாரிகள் இந்த புதிய அதிவேக ரயில் பாதையை சோதனை செய்து வருகின்றனர்.