சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல்!!

சிங்கப்பூர்: தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலின் சிங்கப்பூர் பயணமானது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்தின் அழைப்பின் பேரில் திரு யூ அதிகாரத்துவ பயணமாக சிங்கப்பூர் வந்தடைந்தார்.வர்த்தகம், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் குறித்து இரு நாடுகளும் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் கொரியா வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த சிங்கப்பூர்-கொரியா வணிக மன்றத்தில் முக்கிய உரை நிகழ்த்துவார்.

அக்டோபர் 9 ஆம் தேதி,”சுதந்திரமான, அமைதியான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நோக்கி கொரிய ஒருங்கிணைப்புக்கான ஒரு பார்வை” என்ற தலைப்பில் 47வது சிங்கப்பூர் விரிவுரையை திரு யூன் வழங்குவார்.

மூத்த அமைச்சரும், தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹீன் தலைமை தாங்குவார்.இயந்திரங்கள், பெட்ரோல், மின்சாதனங்கள் போன்றவை இரு நாடுகளுக்கு இடையே அதிகளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் சுமார் 62 பில்லியன் வெள்ளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg