தென்கொரியாவில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
அதன் தலைநகர் சியோலில் டிசம்பர் 17ஆம் தேதி அன்று வெப்பநிலை -12.4 டிகிரி செல்சியஸாக குறைந்தது.
இந்த வாரம் முழுவதும் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாடு முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலத்த காற்று மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தீவு முழுவதும் சாலைப்போக்குவரத்து விபத்துகளை தடுக்க காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.