தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி…!!!

தென் கொரியாவில் தனியாக வாழ்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி...!!!

தென் கொரியாவில் ஒரு பெண் வீட்டிற்குள் செல்ல வழி இல்லாமல் தனது வீட்டின் மாடத்தில் இரண்டு நாட்கள் கழித்தார்.

சோல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அவர் தனது செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக மேல்மாடிக்குச் சென்றார்.

அந்த நேரத்தில் மாடத்தின் கதவு பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவரிடம் திறப்பதற்கு சாவியும் இல்லை. யாரிடமாவது தொடர்பு கொள்வதற்கு செல்போனும் இல்லை.

இதனால் 70 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் மாடத்தில் சிக்கிக் கொண்டார்.

வீட்டில் அவர் மட்டுமே தங்கி இருந்ததால் அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லை.

அவர் கத்தி கூச்சலிட்ட போதும் அவரது சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

நகரத்தில் குளிர் அதிகமாக இருந்ததால் அந்தப் பெண்ணின் நிலை இன்னும் மோசமாக இருந்தது.

அந்தப் பெண் மாடத்தில் இருந்த துணிகளை வைத்து ஒரு கயிறாகப் பின்னி வெளியே தொங்க விட்டார்.

இது எப்படியோ காவல்துறையினரின் கவனத்திற்கு வந்தது.

வீட்டின் மேலே உள்ள மற்றொரு வீட்டைக் கடந்து சென்ற அதிகாரிகள் அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர்.