இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்...!!!

ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தையின் உடலை ஒரு அலமாரியில் மறைத்து வைத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிச் சடங்கு செலவுகளை சமாளிக்க முடியாது என்பதால் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
நோபுஹிக்கோ சுஸுக்கி எனும் 56 வயது நபர் தோக்கியோவில் ஒரு சீன உணவகத்தை நடத்தி வருகிறார்.
ஆனால் அவர் ஒரு வாரமாக உணவகத்தைத் திறக்கவில்லை.
சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
அவரை விசாரிக்க வந்த காவல்துறை அதிகாரிகள் அவர் மறைத்து வைத்திருந்த எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்தனர்.
அவரது தந்தை ஜனவரி 2023 இல் 83 வயதில் காலமானார் என்று அவரது மகன் கூறினார்.
மேலும், அவர் தனது தந்தைக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியப் பணத்தையும் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் அவரைக் கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan