ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்று தேசிய ஐஸ்கிரீம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளை முன்னிட்டு சிங்கப்பூரின் மியூசியம் ஆஃப் ஐஸ்கிரீம், ஜூலை 15 மற்றும் 16, அதாவது இன்று மற்றும் நாளை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 10,000 ஐஸ்கிரீம்களை இலவசமாக ப்ளாசா சிங்கப்பூரா என்ற பேரங்காடியில் வழங்கவிருக்கிறது.
இதில் பங்கு பெறுபவர்கள் ஆசியாவின் மிகப்பெரிய Sprinkle Pool-ல் மூழ்கி இலவச ஐஸ்கிரீமை சுவைக்கலாம்.
இது அனைத்து வயது ஐஸ்கிரீம் ஆர்வலர்களையும் மகிழ்விக்கும் மற்றும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தையும் வழங்கும். சிங்கப்பூர் வெப்பத்தை முறியடிப்பதற்கும் ஐஸ்கிரீம் மற்றும் Sprinkle Pool-ன் தனித்துவமான அனுபவத்தை அனுபவிக்கவும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.